நண்டு மிளகு சூப

Monday, September 6, 2010


நண்டு மிளகு சூப


தேவையான பொருட்கள
பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
செய்முற
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்கவும்.
அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
பிறகு சூடாக பரிமாறவும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector